சித்த மருத்துவம்
குழந்தை
மண் சாம்பல் தின்னும் குழந்தைகட்கு மருத்துவம்:
மிளகு 10 கிராம், ஓமம் 10 கிராம், துளசி இலை 35 கிராம், கீழாநெல்லிவேர் 17 கிராம், கடுக்காய்த்தோல் 17 கிராம், இவைகளை ஒன்று சேர்த்து அம்மியில் அரைத்து, சுண்டக்காய் அளவு மாத்திரையாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு சங்கின் அளவு புளித்த மோரில் மேற்படி மாத்திரையை கரைத்து, கொடுக்கவேண்டும். தினமும் காலையில் மட்டும் ஐந்து தினங்கட்கு கொடுக்க வேண்டும். குழந்தையின் வயிற்றிலிருந்து சாம்பல் மண் முதலியன வந்து விடும். பிறகு குழந்தைகட்கு எந்த வியாதியும் வராது. சிறு குழந்தையாக இருந்தால் தாய் புளி நீக்கி உணவு உட்கொள்ளவேண்டும். சோகைபாண்டு முதலிய வியாதிகள் குணமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக:
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக கண்டங்கத்தரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் உடனே நிற்கும்.