Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
இயற்கை மருத்துவம்

கை, கால்


நகச்சுற்று நீங்க:-

சுண்ணாம்பையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து நகச் சுற்று உள்ள இடத்தில் வைத்து கட்ட அது நீங்கி குணமாகும்.

நகங்களை அழகாக வெட்ட:

வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

சேற்றுப்புண் ஆற:-

உளுந்தை ஊறவைத்து விழுதாக அரைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்துத் தடவ புண் ஆறும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம்

அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

கை, கால் வீக்கம்:

அவாரம்பட்டை, சுக்கு கியவற்றை சம அளவு 400 மி.லி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.